Pages

Saturday, January 29, 2011

சர்பாசனம்.4

கண்டகிரியா


சர்பாசனம்.3


சர்பாசனம்.2


சர்பாசனம்.1


வஜ்ராசனம் .7


வஜ்ராசனம் .6


வஜ்ராசனம் .5


வஜ்ராசனம் .4


வஜ்ராசனம் .3


வஜ்ராசனம் .2


வஜ்ராசனம் .1


பத்மாசனம்.11


பத்மாசனம்.10


Friday, January 28, 2011

பத்மாசனம்.9


பத்மாசனம்.8


பத்மாசனம்.7


பத்மாசனம் .6


பத்மாசனம்


Thursday, January 20, 2011



யோக கலை பயன்கள்

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது.

யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது.

யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.

யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.



யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும்.
அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம்.


யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை.


இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே.

யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்

. யோகப் பயிற்சியின் சிறப்புகள்
1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.
2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது
. 4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.



ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

பத்மாசனம்.5.


பத்மாசனம்.4.


பத்மாசனம்.3.


பத்மாசனம்.2.


பத்மாசனம்.1.

யோகா செய்வது எப்படி?


வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 

  • உட்காசனம்
  • பத்மாசனம்
  • வீராசனம்
  • யோகமுத்ரா
  • உத்தீதபத்மாசனம்
  • சானுசீரானம்
  • பஸ்திமோத்தாசனம்
  • உத்தானபாத ஆசனம்
  • நவாசனம்
  • விபரீதகரணி
  • சர்வாங்காசனம்
  • ஹலாசனம்
  • மச்சாசனம்
  • சப்தவசீராசனம்
  • புசங்காசனம்
  • சலபாசனம்
  • தணுராசனம்
  • வச்சிராசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • மகாமுத்ரா
  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  • சிரசாசனம்
  • சவாசனம்
  • மயுராசனம்
  • உசர்ட்டாசனம்
  • அர்த்த மத்ச்யோந்திராசனம்
  • அர்த்த சிரசானம்
  • சிரசாசனம்
  • நின்ற பாத ஆசனம்
  • பிறையாசனம்
  • பாதாசுத்தானம்
  • திருகோணசனம்
  • கோணாசனம்
  • உட்டியானா
  • நெளலி
  • சக்கராசனம்
  • சவாசனம்/சாந்தியாசனம்
  • பவனமுத்தாசனம்
  • கந்தபீடாசனம்
  • கோரசா ஆசனம்
  • மிருகாசனம்
  • நடராசா ஆசனம்
  • ஊர்த்துவ பதமாசனம்
  • பிரானாசனம்
  • சம்பூரண சபீடாசனம்
  • சதுரகோனோசனம்
  • ஆகர்சன தனூராசனம்
  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  • உருக்காசனம்
  • ஏக அத்த புசங்காசனம்
  • யோகா நித்திரை
  • சாக்கோராசனம்
  • கலா பைரப ஆசனம்
  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  • கவையாசனம்
  • பூர்ண நவாசனம்
  • முக்த அகத்த சிரசாசனம்
  • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
  •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம் 

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்  

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 

விபரீதகரணி 

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   

புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 

நன்றி : விக்கிபீடியா, கூகுள், வேர்க்கடலை விற்றவன்  

Wednesday, January 19, 2011

யோக முத்திரைகள் :

யோக முத்திரைகள் : அறிமுகம்
பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)


இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம் படிமம் நெருப்பு படிமம் நிலம் படிமம் உலோகம் படிமம் நீர் படிமம் மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல்
- நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.











யோகா ஆ‌சி‌ரியரின் ஆலோசனைகள்

யோகா ஆ‌சி‌ரிய‌ர் ‌சு‌ப்ரம‌ணிய‌ம் அ‌ளி‌க்கு‌ம் ‌சில பொதுவாக ஆலோசனைக‌ள் இ‌ங்கே.
பொதுவாக நாம் நிமிர்ந்து உட்கார வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தாலே பல பிரச்சினைகள் வராது.
அதுபோலவே, பல மணி நேரம் குனிந்திருந்தாலோ, கைகளை குவித்து வைத்து மவுசைப் பிடித்திருந்தாலோ, அதற்கு எதிர்பக்க செயலை செய்ய வேண்டும்.
அதாவது முதுகை பின்பக்கமாக, நமது வயிறு முன்னுக்கு வரும்படியாக சில நொடிகள் இருக்கலாம். அதுபோலவே கைகளையும் பின்பக்கமாக வளைத்தபடி பிடித்திருக்கலாம். இது நல்ல பயிற்சியாக அமையும்.
பொதுவாக காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கலாம். அதிலும், காலையில் எழுந்ததும் டி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது காலையில் ஏற்கனவே வயிற்றில் பித்த நீர் சுரந்து இருக்கும். அந்த சமயத்தில் பித்தத்தை அதிகரிக்கக் கூடிய டீயைக் குடிப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகிறது.
அதற்கு பதிலாக சுக்குக் காபி, மல்லி காபி, இஞ்சி காபி போன்றவை அருந்தலாம்.
குறை‌ந்தப‌ட்ச‌ம் இவைகளை மே‌ற்கொ‌ண்டா‌ல் ஓரள‌வி‌ற்கு நமது உட‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌ப்பா‌ற்றலா‌ம்.

தொப்பை குறைய யோகா

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா இது.
ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க.
  • காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
  • கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
  • கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
  • கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
  • கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
  • எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
  • அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
கவனம்:
  • வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
  • கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.

Tuesday, January 18, 2011